திங்கள்நகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் திங்கள்நகர் முதல் பரசேரி வரை உள்ள பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தால் குழாய் பதிப்பதற்காக தோண்டபட்டு கான்கீரிட் சிலாப்புகளால் மூடபட்டது. தற்போது, மடவிளாகம், பேயன்குழி ஆகிய பகுதிகளில் சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், மொட்டவிளை.