நன்னிலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த போலீஸ் நிலைய கட்டிடம் சேதமடைந்து, ஜன்னல்களில் கதவுகள் இன்றி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து ஆவணங்கள் மற்றும் கணினிகள் பழுதடையும் நிலையும் உள்ளது. இதனால் போலீசார் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீஸ்நிலையத்தை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.