ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேங்கிய மழைநீரிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உருவாகி வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் கொசு கடியால் இரவு நேரங்களில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.