கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி கிராமத்தில் கிராம சேவை மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் தொடங்கிய பணி நாட்கள் செல்ல, செல்ல ஆமை வேகத்துக்கு வந்தது. அதன்பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை, கட்டிட பணி முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த கிராம சேவை மையம், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே கிராம சேவை மையத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.