மணிமுத்தாறு ஆலடியூர் மேல ஏர்மாள்புரத்தில் மோட்டார் அறையின் மீது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த மோட்டார் அறையின் மீது செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மோட்டார் அறை சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மோட்டார் அறையின் மீதுள்ள செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.