சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடியில் இருந்து பரவகரடு அத்துவான மாரியம்மன் கோவில் வரை சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் பாம்பு, விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்களும், பொதுமக்களும் அந்த வழியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நிகிலன், கருப்பூர், சேலம்.