நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட வைராவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டது. புதிய குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் பழைய குடிநீர் தொட்டி இன்னும் அகற்றப்படவில்லை. அந்த குடிநீர் தொட்டியானது மிகுந்த சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய நீர்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.