திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாஸ்ரெட்டி கண்டிகை பகுதியில் சேதம் அடைந்த பள்ளி இருந்து வந்தது. அந்த பள்ளி கட்டிடத்தை பாதி இடித்துவிட்டு மீதி உள்ள கட்டிடத்தை 2 வாரமாகியும் இடிக்கவில்லை. இதனால் அது ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.