தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை அரசு நடுநிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த அரசு பள்ளிக்கு அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. பென்னாகரம் நாகமரை பிரதான சாலையோரம் அமைந்துள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தான முறையில் அமைந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
-செந்தில், நாகமரை, தர்மபுரி.