கிடப்பில் போடப்பட்ட பாலப்பணி

Update: 2022-11-02 14:28 GMT
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி கிராமத்துக்கும், முத்துவாஞ்சேரி கிராமத்துக்கும் இடையே காரைக்குறிச்சி-வி.கைக்காட்டி நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் சிறு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து பாலப்பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தக்காரர் துரிதமாக துவங்கினார். சாலையை துண்டிக்கும் வகையில் பாலத்திற்கான அஸ்திவாரப் பணிகளை தொடங்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு என்ன காரணத்தினாலோ அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்துகள் சாலை ஓரத்தில் உள்ள தற்காலிக மண் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வாகனங்கள் சேற்றில் சறுக்கி விழுவதும், சிக்கிக் கொள்வதும் அடிக்கடி நடைபெறுகிறது. புதிதாக இந்த சாலையில் வருபவர்களுக்கு பாலம் பணிகள் நடைபெறுவதை எச்சரிக்கும் வகையில் எந்த அறிவிப்பு பலகையும் அமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து ராட்சத பள்ளத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்