புகார் பெட்டி செய்தி எதிரொலி; சாலையோரம் காய்ந்த மரங்கள் அகற்றம்

Update: 2022-10-31 06:25 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு அருகில் சாலையோரம் உயரழுத்த மின்கம்பிகளின் அருகில் 2 பனை மரங்கள் பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ளதாக மாடசாமி என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக காய்ந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்