செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமம் கருமாரத் தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பலவித நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.