சேதமடைந்த கட்டிடம்

Update: 2022-10-30 16:29 GMT

சேலம் சூரமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தையை ஒட்டியுள்ள மாநகராட்சி கட்டிடம் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த கட்டிடத்தையொட்டி காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இதன் அருகே காய்கறி விற்பவர்கள் பயத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-முருகேசன், சூரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்