குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-30 15:38 GMT

கிருஷ்ணகிரி நகரில் தலைமை தபால் நிலையத்திற்கு செல்லும் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்களும் குடியிருப்புகளும் உள்ளன. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்