விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்புறம் உள்ள சக்கரகுளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து விரிசலுடன் காணப்படுகிறது. மேலும் சுற்றுச்சுவரில் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் சுவர் பலம் இழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்த சாலையை கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடேனே கடந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்து இதில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்.