பெங்களூரு ரிச் மண்ட் சாலையில் மசூதி அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிமெண்டு கற்கள் பெயர்ந்தும், உடைந்தும் கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.