திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு சின்னகளக்காட்டுர் கிராமத்தில் பல ஆண்டுகளாக பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் ரேஷன் கடை என்ற முறையில், மாதந்தோறும் 2 முறை ரேஷன் பொருட்களை வண்டியில் வைத்து வழங்கப்படுகிறது. 2 நாட்கள் மட்டும் கொடுப்பதால் எங்களால் பொருட்களை வாங்க முடிவதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை முறையை ரத்து செய்து, மீண்டும் நிரந்தர ரேஷன் கடையை அமைத்து தர வேண்டுகிறோம்.