தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு அருகில் சாலையோரம் உள்ள 2 பனை மரங்கள் பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. பலத்த காற்றில் காய்ந்த மரங்கள் சரிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.ெ