நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் அங்காடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்காடி கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.