கிருஷ்ணகிரி நகரையொட்டி வனப்பகுதி அதிகமாக உள்ளன. இங்கிருந்து குரங்குகள் அதிகமாக நகருக்குள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.