கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கோமுகி அணை பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் சோமண்டார் குடி மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால்களில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் மண்ணாலும் முட்செடிகளாலும் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல வில்லை. இதன் காரணமாக போதிய தண்ணீர் இன்றி விவசாயிகள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே பாசன வாய்க்கால்களை தூர் வாரிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?