சிவகிரி தாலுகா இனாம் கோவில்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள பொது சேவை மையத்தில் தற்காலிகமாக துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.