நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மனேரி பாலத்தில் இருந்து முக்கூடலிங்க சாஸ்தா கோவில் வரையிலும் வடக்கு பச்சையாற்றில் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, வடக்கு பச்சையாற்றில் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.