தூத்துக்குடி அருகே தெய்வசெயல்புரத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் வடக்கு காரசேரி கிராமம் உள்ளது. இங்கு ஊர் பெயர் பலகை வைக்கப்படாததால், வெளியூர்களில் இருந்து பயணிகள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வடக்கு காரசேரி கிராமத்தில் ஊர் பெயர் பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.