தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சி நெருப்பூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு அரசு பொது கிணறு உள்ளது. அரசு பள்ளியின் நுழைவுவாயில் எதிரில் இருக்கும் இந்த கிணறு மூடப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் இந்த கிணற்றை எட்டி பார்க்கும் போது தவறி உள்ளே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை பாதுகாப்பாக மூடி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சந்தோஷ், ஏரியூர், தர்மபுரி.