ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2022-10-23 12:39 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் பல்வேறு அரசு சேவைகளை அந்த பகுதி மக்கள் பெற்று வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் சேதமடைந்து, அதில் உள்ள சிமெண்டுகாரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்