கோவை மாநகராட்சி வீரகேரளம் பொங்காளியூர் செல்லும் சாலையில் ஆசிரியர் குடியிருப்பு 4-வது வீதியில் சாலையோரத்தில் தரைமட்ட கிணறு மூடப்படாமல் உள்ளது. இந்த கிணறு இருப்பது தெரியாததால், இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மலைக்காலங்களில் கிணற்றில் சாலையோர மண் சரிந்து விழுந்தால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் திறந்த நிலையில் உள்ள தரமைட்ட கிணற்றை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.