கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டான இந்திரா நகர் பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்புக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் உடைப்பை சரி செய்த பிறகு குழியை சரியாக மண் போட்டு மூடவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. குழியை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.