சுற்றுசுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-10-19 16:54 GMT

தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு பெரிய ஏரி பகுதியில் மயானம் உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழைக்கு ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் மயானம் மழைநீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இயற்கை மரணம் அடைவோரை அடக்கம் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அவதிகுள்ளாகி வருகிறார்கள். எனவே மயானத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் அமைத்து மழைநீர் புகாதவாறு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிரி, தர்மபுரி.

மேலும் செய்திகள்