விருத்தாசலம் நகராட்சி பஸ் நிலையத்தில் சிலர் மதுகுடித்துவிட்டு போதை தலைக்கு ஏறியதும் ஆபாசமாக பேசுவது, பயணிகளிடம் தகராறு செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்கு வரவே அச்சப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்து வரும் மதுபிரியர்களை கைது செய்ய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.