பெங்களூரு ராஜாஜிநகர் 7-வது கிராஸ் பகுதியில் உள்ள பூங்கா அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே சிமெண்டு கம்பம் உள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையில் இருந்து இறங்கி சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சிமெண்டு கம்பத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.