கம்பம் பகுதியில் வீரப்பநாயக்கள்குளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு செல்லும் கரை பகுதி சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.