விழுப்புரம் 4 முனை சந்திப்பில் உள்ள நிழற்குடை அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் வாய்க்கால் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாயில் தோண்டப்படும் கழிவு மண்ணை அங்கு பொதுமக்கள் அமருவதற்காக வைக்கப்பட்டுள்ள நாற்காலியின் மீது போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கழிவு மண்ணை உடனடியாக அகற்றி இருக்கைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.