தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஒண்ணப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி தட்டாரப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தின் நுழைவு வாயிலிலும், நிழற்கூடத்திலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மயானத்துக்கு வரும் பொதுமக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சீமைகருவேல மரங்களை அகற்றி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை முன்வருவார்களா?
-கண்ணன், தட்டாரப்பட்டி, தர்மபுரி.