கொசுக்கள் தொல்லை

Update: 2022-10-16 14:19 GMT

கும்பகோணம் தாலுகா சோழபுரத்தை அடுத்துள்ள விளந்தகண்டம் ஊராட்சி மற்றும் குமரன்குடி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. ஒரு சில பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து தெளிக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்