விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட முஹம்மதியர் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்ற புகாரின் அடிப்படையில் இரண்டு இடங்களில் பள்ளம் தோண்டினார்கள். ஆனால் பள்ளம் தோண்டப்பட்டு பலநாட்கள் ஆகியும் இதுவரை பணி முடியவில்லை. பள்ளம் தோண்டப்பட்ட இடம் மிகவும் குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பணியை விரைந்து முடித்து அப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.