டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

Update: 2022-10-16 14:14 GMT
வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுகுடிக்க வருபவர்கள் போதை தலைக்கு ஏரியதும் ஆபாசமாக பேசுவது, தகராறில் ஈடுபடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள், பெண்கள் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்