கோவை சிவானந்தா காலனி ரத்தினபுரி சாஸ்திரி சாலை பாலம் பகுதியில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால் மழை பெய்யும்போது, அங்கு அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி செல்கின்றன. மேலும் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.