அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது திடீரென குறுக்கே ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் செல்லும் சிறுவர், சிறுமிகளை தெருநாய்கள் கடிக்க வருவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சமடைந்து உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.