பிரம்மதேசத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் தூண்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிவதால் கட்டிடம் பலவீனமடைந்து காணப்படுகிறது .மேலும் மேற்கூறையும் சேதமடைந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் மழை நீர் ஒழுகுவதால் அத்தியாவசிய பொருட்கள் அதில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே இடிந்து விழும் முன் ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.