பெங்களூரு ஜே.பி.நகர் 1-வது பேஸ் பகுதியில் சாலையோரம் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மரம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.