பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் ஒசகோட்டை செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் வசதிக்காக தெருவிளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் கடந்த சில நாட்களாக முறையாக எரிவது கிடையாது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.