பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் சாலையின் ஓரத்தில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் அந்த பகுதியினர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடிவது இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.