பழனி பஸ்நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல் சுற்று வட்டார பகுதி மக்களும் அன்றாட தேவைக்கு பழனிக்கு வருகின்றனர். ஆனால் அங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அதாவது பஸ்நிலையத்தில் உள்ள கழிப்பறை கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் காசு கொடுத்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.