தடுப்பு சுவர் தேவை

Update: 2022-10-12 14:30 GMT

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாவறை ஊராட்சியின் ஆலங்கோடு பகுதியில் சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் அருகில் பாதுகாப்பற்ற மூடியுடன் உறைகிணறு உள்ளது. மையத்துக்கு வரும் சிறு குழந்தைகள் விளையாட்டும்போது அதன் அருகில் சென்று விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் செல்லாத வகையில் உறைகிணற்றை சுற்றி பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜூ, அடைக்காக்குழி.

மேலும் செய்திகள்