தோவாளை பெரிய குளத்தின் மறுகால் பாயும் இடத்தின் அருகே இருந்த தடுப்பு சுவர் கடந்த மழை காலத்தில் இடிந்து வெள்ளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு உடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால், தற்போது அந்த சாக்கு மூடைகள் சேதமடைந்து மணல் வெளியே கொட்டி வருகிறது. மழைகாலம் தொடங்க இருப்பதால் மீண்டும் அந்த பகுதியில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து போா்க்கால அடிப்படையில் அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-நீ.மு.தாணு, ஆரல்வாய்மொழி.