மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தான்தோன்றி பகுதியில் பரணிபாடு குளம் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த குளம் நிரம்பினால், ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே ஊரின் கிழக்கு பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து, ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.