நடைபாதையில் நிற்கும் மோட்டார் சைக்கிள்கள்

Update: 2022-10-11 15:11 GMT
பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் வாகன விற்பனை நிறுவனம் ஒன்று, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி உள்ளது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடிவதில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்