பெங்களூரு அல்சூரில் இருந்து மானேக்ஷா மைதானம் செல்லும் சாலையில் சிக்னல் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காய்ந்த மரக்கிளைகள் கிடக்கின்றன. இதனால் அந்த நடைபாதையை அந்த பகுதியினர் பயன்படுத்த முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையில் கிடக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.