தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி செட்டித்தோப்பு பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணைக்கு தண்ணீர் வரும் கால்வாயை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த கால்வாயில் சிலர் இறந்த நாயின் சடலத்தை வீசி உள்ளனர். இதனால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருவதுடன், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாயின் சடலத்தை அகற்றுவதுடன், கால்வாயில் குப்பைகள், கழிவுகளை வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி